18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  தொழிலாளர்கள் அமைதி வழி காத்திருப்பு ! 

மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  தொழிலாளர்கள் அமைதி வழி காத்திருப்பு ! 

எழுதியவர்: Baker BAker February 12, 2024, 9:02 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஏழை எளிய மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தன் மற்றும் வட்டாட்சியர்கள் சந்திரன். மற்றும் ரங்கராஜ் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து  அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் வட்டாட்சியர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று வரும் 16ஆம் தேதி நிறைவேற்றி தருவதாக தெரிவித்ததை தொடந்து அனைவரும் தற்காலிமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!