18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் பதினைந்து ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த நபர் கைது..

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் பதினைந்து ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த நபர் கைது..

எழுதியவர்: Abubakker Sithik February 12, 2024, 7:49 am

தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது

தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா(42) என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றி கூறி வந்துள்ளார். இந்நிலையில் மேற்படி குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதின் பேரில் கடையநல்லூர் மற்றும் தென்காசி காவல் துறையினர் இணைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேற்படி குற்றவாளி கடந்த 2007 ஆம் ஆண்டு தென்காசியில் நடைபெற்ற (6 murder) வழக்கின் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!