17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்புல்லாணியில் வேளாண்மை துறையின் தொழில்நுட்ப வேளாண்மை முகாம் !

திருப்புல்லாணியில் வேளாண்மை துறையின் தொழில்நுட்ப வேளாண்மை முகாம் !

எழுதியவர்: Baker BAker February 11, 2024, 7:09 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வேளாண்மை துறை சார்பில்  சேதுக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பஞ்சதாங்கி கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப வேளாண்மை முகாம் திட்டத்தின் கீழ்பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில்  விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் (ஓய்வு) சுப்ரமணியன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நெல் சாகுபடியில் பின்பற்ற வேண்டிய முக்கிய தொழில் நுட்பங்களான ரகம் தேர்வு செய்தல், உயிர் உர விதை நேர்த்தி, பூஞ்சான  விதை நேர்த்தி செய்தல், மற்றும் கலை நிர்வாகம் பயிர் பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுடைய நெற்பயிருக்கு நெல் நுண்ணூட்டம் விட வேண்டியது அவசியம் மற்றும் மண் பரிசோதனை செய்து அதற்கு தேவையான அளவு உரம் பயன்படுத்துமாறு திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் பரிந்துரை வழங்கினார் . நெல் அறுவடை பின் அரசு மூலம் நிர்ணயம் செய்த நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) விற்பனை செய்து வரும் லாபத்தை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் விவசாயிகளுக்கு உயிர் உர விதை நேர்த்தி மற்றும் நல் விதை தேர்வு செய்யும் முறை பற்றி செயல் முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. வயல்வெளியில் நன்மை தீமை செய்யும் பூச்சிகள் அடையாளம் காணும் முறைகள் விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ச.ஜோசப் மற்றும் உதவி வேளாண் அலுவலர் ம.ப முருகேசன் ஆகியோர்  செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!