18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கல்பட்டில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்..

செங்கல்பட்டில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்..

எழுதியவர்: Askar February 10, 2024, 1:07 pm

செங்கல்பட்டில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்..

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சார்பாக சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணியானது செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி ராட்டினம் கிணறு வரை நடைபெற்றது. இப்பேரணியை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், செங்கல்பட்டு உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், செங்கல்பட்டு சைபர் கிரைம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் மார்ட்டின் பிரேம் ராஜ், செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

இப்பேரணையில் செங்கல்பட்டு நகரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சார்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு- சக்திவேல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!