18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் 40 க்கும் மேற்பட்ட மின்சார இரயில்கள் ரத்து!- தெற்கு ரயில்வே அறிவிப்பு..

நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் 40 க்கும் மேற்பட்ட மின்சார இரயில்கள் ரத்து!- தெற்கு ரயில்வே அறிவிப்பு..

எழுதியவர்: Askar February 10, 2024, 10:54 am

ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது.அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு (காலை 10.30, காலை 10.40, காலை 10.50, காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50, மதியம் 1, மதியம் 1.15, மதியம் 1.30, மதியம் 1.45, மதியம் 2, மதியம் 2.15, மதியம் 2.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு (காலை 10.05, காலை 10.15, காலை 10.25, காலை 10.45, காலை 10.55, காலை 11.25, காலை 11.35, மதியம் 12, மதியம் 12.15, மதியம் 12.45, மதியம் 1.30 மணி, மதியம் 1.45, மதியம் 2.15, மாலை 4.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு (காலை 9.40, காலை 10.55, காலை 11.30, மதியம் 12, மதியம் 1) ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்களும், காஞ்சிபுரம்- கடற்கரை (காலை 9.30 மணி), திருமால்பூர்- கடற்கரை (காலை 11.05) ஆகிய மின்சார ரெயில்களும் என மொத்தம் 44 மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, மதியம் 1.45 மதியம் 2.20, மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் (செங்கல்பட்டு- தாம்பரம்) காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!