18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதலியார்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்..

முதலியார்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்..

எழுதியவர்: Abubakker Sithik February 10, 2024, 9:46 am

முதலியார்பட்டி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி; வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய எழுத்தறிவு திட்டம் மூலம் அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப்பேசினார். உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து ராஜா, அறிவியல் ஆசிரியர் முத்துராஜா, ஆசிரியைகள் எல்சி, காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஆஷா ராஜ் வரவேற்றார். இந்தியா எழுத்தறிவு திட்ட பணியாளர் பத்மா பரிசுகளை வழங்கினார். ஆசிரியை ரமணி நன்றி கூறினார். அறிவியல் கண்காட்சி பிரிவில் ஆறாம் வகுப்பில் மாலிக், ஏழாம் வகுப்பில் அபுதாலிப், எட்டாம் வகுப்பில் ரிபாய், ஒன்பதாம் வகுப்பில் அபுல் மகாசின், பத்தாம் வகுப்பில் நதீம் ஆகிய மாணவர்கள் பரிசுகளை பெற்றுக் கொண்டனர். ஓவியப் போட்டியில் சந்துரு என்ற மாணவர் முதல் பரிசும், ரிஃபானா என்ற மாணவி இரண்டாவது பரிசும், ஜெரினா பாத்திமா என்ற மாணவி மூன்றாவது பரிசையும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!