17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழப்பாவூரில் ஆதார் சிறப்பு திருத்த முகாம்; பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்..

கீழப்பாவூரில் ஆதார் சிறப்பு திருத்த முகாம்; பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்..

எழுதியவர்: Abubakker Sithik February 10, 2024, 6:18 am

கீழப்பாவூரில் ஆதார் சிறப்பு திருத்த முகாம்; பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்..

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடந்தது. குருசாமி கோவில் திருமண மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் பொருளாளர் பரமசிவம், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் ஜேக்கப் சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் செயலாளர் ரஜினி வரவேற்புரை ஆற்றினார். ஆலமர வட்டாரத் தலைவர் இளங்கோ முகாமை துவக்கி வைத்தார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் சினேகா பாரதி நன்றியுரை ஆற்றினார். கீழப்பாவூர் தபால் நிலைய பணியாளர்கள் மற்றும் முன்னாள் தபால் நிலைய அலுவலர் கு. விஜயரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வியாழக்கிழமை முதல் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம் சனி கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் ஆதார் திருத்தம் தொடர்பான இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!