18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் ஹஜ் பயணிகள் சிஐடியு சங்கம் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு !

மேட்டுப்பாளையம் ஹஜ் பயணிகள் சிஐடியு சங்கம் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு !

எழுதியவர்: Baker BAker February 9, 2024, 12:34 am

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் செய்வதற்கு முழு உடல் பரிசோதனை செய்து தர கோரி சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் மற்றும் மேட்டுப்பாளையம் ஹஜ் பயணம் வழிகாட்டி குழு ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கினார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜாவை இரு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து புனித ஹஜ் பயணம் செய்வதற்கு தேவையான மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டி கோரிக்கை வைத்தனர்.. உடனே மருத்துவர் மனோகரன் மருத்துவர் லோகேஷ் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு முழு பரிசோதனை செய்யப்பட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி புரிந்த அரசு மருத்துவர்கள் , சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் மற்றும் மேட்டுப்பாளையம் ஹஜ் பயண வழிகாட்டி குழு ஆகியோர் வாழ்த்துக்களின் பாராட்டுகளையும் புனித ஹஜ் பயணம் செல்பவர்கள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!