17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சாலை விபத்தில் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலி..

மதுரையில் சாலை விபத்தில் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலி..

எழுதியவர்: Askar February 7, 2024, 5:26 pm

மதுரையில் சாலை விபத்தில் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலி..

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தினத்தந்தி பாலத்தில் இன்று காலை அரசரடி புதுஜெயில் ரோட்டை சேர்ந்த ஸ்டீபன் ஜெயராஜ் என்பவரின் மனைவி லலிதா ராஜமலர் என்பவர் வில்லாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சமூகவியல் ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார்.

இவர் வீட்டிலிருந்து இன்று காலை பள்ளிக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றபோது தினத்தந்தி பாலத்தில் கட்டப்பொம்மன் சிலை பகுதியில் வரும் பாலம் இறக்கத்தில் இடதுபுறம் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிம்பர் லாரி இவரின் இருசக்கர வாகனத்தில் மோதியதில் இவர் லாரியின் பின்பக்க சக்கரத்தின் பகுதியில் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து விபத்து சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!