17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேட்கும் கருவிகள்; சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் வழங்கினார்..

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேட்கும் கருவிகள்; சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் வழங்கினார்..

எழுதியவர்: Abubakker Sithik February 6, 2024, 4:33 pm

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேட்கும் கருவிகள்; மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் வழங்கினார்..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தலைமையில் காது கேட்கும் கருவி வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கபட்டது.

இம்முகாமிற்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கண்காணிப்பாளர் மரு.ஆர். ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். உறைவிட மருத்துவ அலுவலர் மரு. செல்வபாலா வரவேற்புரை நிகழ்த்தினார். மரு. சரஸ்வதி (தலைமை குடிமை மருத்துவர்) நன்றி தெரிவித்தார். இம்முகாமில் செவித்திறன் பாதுகாப்பு, காது மூக்கு தொண்டை நோய் சிகிச்சையில் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து மரு. மணிமாலா விளக்கி கூறினார். இக்கூட்டத்தில் மரு. ராஜேஷ், மரு.கீதா, மரு.கார்த்திக், அறிவுடைநம்பி, ஆடியோலஜிஸ்ட் ரெக்ஸ், CMCHS மேனேஜர் ரவி, ஜெயந்தா, திருமலை, செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!