18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பார்ட் பயிற்சி மைய மாணவர்கள் காவலர் உடற்தகுதி தேர்வுக்கு நெல்லை பயணம்..

பார்ட் பயிற்சி மைய மாணவர்கள் காவலர் உடற்தகுதி தேர்வுக்கு நெல்லை பயணம்..

எழுதியவர்: Abubakker Sithik February 6, 2024, 7:47 am

புளியங்குடி பார்ட் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் தமிழக அரசின் இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வுக்கு நெல்லை செல்கின்றனர். புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளை அரசு போட்டித்தேர்வு உள்ளிட்ட பல்வேறு கல்விப்பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் புளியங்குடி மற்றும் சுற்றுவட்டார மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் புளியங்குடி பார்ட் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 06-02-2024 இன்று தமிழ்நாடு அரசு நடத்தவிருக்கும் இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வுக்கு திருநெல்வேலிக்கு பயணம் செய்கின்றனர். இந்த மாணவர்களின் வெற்றி பயணத்தை புளியங்குடி பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் கலீலுல் ரஹ்மான் (பைஜி) பிரார்த்தித்து கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் ஜமாத்தார்கள், கல்வியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பார்ட் அறக்கட்டளை நிர்வாகிகள், பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!