17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அதிமுகவில்  இணைந்தார்..

சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அதிமுகவில்  இணைந்தார்..

எழுதியவர்: Askar February 4, 2024, 5:34 am

சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அதிமுகவில்  இணைந்தார்..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்ற வேண்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையேற்று அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர் இந்த நிலையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்திற்குஉட்பட்ட சோழவந்தான் பேரூர் கழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்து வருகின்றனர் இந்த நிலையில் சோலை ரவி ஏற்பாட்டில்சோழவந்தான் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பேட்டை அப்பாச்சி கண்ணன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர் பி உதயகுமார் தலைமையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் பேரூர் இளைஞர் அணி செயலாளர் கேபிள் மணி பேட்டை மாரி இ.ராஜா எஸ். சுரேஷ் சி பாலுசாமி முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்..செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!