18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஞானாவாபி பள்ளிவாசல் விசயத்தில் அத்து மீறிய அநீதிகளை கண்டித்து முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம்..

ஞானாவாபி பள்ளிவாசல் விசயத்தில் அத்து மீறிய அநீதிகளை கண்டித்து முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம்..

எழுதியவர்: Askar February 3, 2024, 1:27 pm

ஞானாவாபி பள்ளிவாசல் விசயத்தில் அத்து மீறிய அநீதிகளை கண்டித்து முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம்..

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும் வண்ணம் நடைபெறும் கியான் வாபி மசூதி மீதான நடவடிக்கைகளை கண்டித்து,

கியான் வாபி மசூதியை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை பாதுகாக்கவும், வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும், பரவி வரும் வெறுப்பு பிரச்சாரங்களை வேரறுக்கவும், நல்லிணக்கத்திற்கு எதிரான செயல்களை ஒன்றிய அரசு ஊக்குவிப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தகவல். கே. நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலத் துணைத் தலைவர் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!