17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வருமானம் ! ரூ.1.58 கோடி உண்டியல் வசூல் !! லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் !!!

ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வருமானம் ! ரூ.1.58 கோடி உண்டியல் வசூல் !! லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் !!!

எழுதியவர்: Baker BAker February 2, 2024, 11:48 am

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1.58 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. கடந்த மாதம் 6ந்தேதி உண்டியல் எண்ணப்பட்ட போது 1.51 கோடி கிடைத்திருந்த நிலையில் 24 நாட்களில் மீண்டும் உண்டியல் வசூல் கோடியை தாண்டியுள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தின விழா தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகரித்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினர். கோவில்களில் உள்ள உண்டியல்கள் நிறைந்ததால் ராமநாத சுவாமி கோயில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதியில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நம்பு கோவில் உள்பட உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் இணைஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட இந்த பணத்தை கோவில் கல்யாண மண்டபத்தில் கொண்டுவரப்பட்டது. அங்கு இணை ஆணையர் சிவராம் குமார், உதவி ஆணையர், பேஸ்கார் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்கப்பணம் ரூபாய் ஒரு கோடியே 58 லட்சத்தி 38 ஆயிரம் ரூபாய், தங்கம் 70 கிராம், வெள்ளி 12 கிலோ 890 கிராம், வெளிநாட்டு நாணயம் 92 காணிக்கையாக கிடைத்தது.உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மற்றும் உப கோவில்களில் உள்ள உண்டியல் கடந்த மாதம் 6தேதி திறந்து எண்ணப்பட்டதில் ரூ.1.51 கோடி உண்டியல் வருமானம் கிடைத்த நிலையில் 24 நாட்ளுக்கு பின் உண்டியல் எண்ணப்பட்டதில் ரூ.1.58 கோடி கிடைத்துள்ளது. இதனால் 24 நாட்களில் ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வருமானம் மீண்டும் கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!