17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்..

தென்காசியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்..

எழுதியவர்: Abubakker Sithik January 31, 2024, 8:42 am

தென்காசியில் ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக வலம் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், கால வரையறை இன்றி சரண் விடுப்பு ஒப்படைக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!