19 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு !

கீழக்கரையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு !

எழுதியவர்: Baker BAker January 30, 2024, 11:53 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.விஜயகுமார் தலைமையில்  உணவக கடைகளில் ஆய்வு நடைபெற்றது.  இதில் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 12 உணவாக கடைகளுக்கும் பள்ளி அருகே புகையிலை பீடி சிகரெட் போன்ற பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் பரமக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் கீழக்கரை நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பரகத்துல்லா கீழக்கரை காவல் நிலைய காவலர் ராம்கி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!