18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோத புகையிலை பொருட்கள்; பதுக்கி வைத்திருந்த இருவர் கைது..

சட்டவிரோத புகையிலை பொருட்கள்; பதுக்கி வைத்திருந்த இருவர் கைது..

எழுதியவர்: Abubakker Sithik January 30, 2024, 9:20 pm

சங்கரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை அருகே சார்பு ஆய்வாளர் சுரேஷ் கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த K. ரெட்டியார்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் மணிகண்டன் (41) மற்றும் கீழக்கலங்கல் பேட்டை தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் மாரிமுத்து (33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 17,440 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!