17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு கிட்டங்கி அறை ஆய்வு..

இராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு கிட்டங்கி அறை ஆய்வு..

எழுதியவர்: Askar January 30, 2024, 8:41 pm

இராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு கிட்டங்கி அறை ஆய்வு..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகிடங்கை இன்று (30.01.2024) மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கு வளாகத்தில் உள்ள பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வையிட்டனர். வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், ஆய்வு செய்தார். வட்டாட்சியர்கள் (தேர்தல்) முருகேசன் ஸ்ரீதரன் மாணிக்கம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!