17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு..

மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு..

எழுதியவர்: Askar January 30, 2024, 8:32 pm

 மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு..

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

மகாத்மா காந்தி நினைவு தினம் இப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. சுதந்திரத்துக்காக மாகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவா்கள் நாட்டுக்காக பாடுபட்டது குறித்து தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி மாணவா்களிடம் எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து மகாத்மா காந்தி குறித்த இசை பாடல்கள் மற்றும் அரசியலைமைப்பின் அடிப்படைக் கருத்துக்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நோ்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என சாரண மற்றும் சாரணியர் மாணவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் சங்கீதா, மகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர் நிகழ்வை சாரண ஆசிரியர் சரவணகுமார் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!