17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சாலையை சீரமைக்க தொடரும் கோரிக்கை..

வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சாலையை சீரமைக்க தொடரும் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் February 1, 2017, 3:21 pm

கீழக்கரையில் கடந்த வருடம் ஊரின் பல பகுதிகளுக்கு சாலை அமைக்க குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது, ஆனால் ஒப்பந்தத்தை முழுமையாக பூர்த்தி செய்யாத வகையில் இன்னும் முழுமையடையாமல் பல இடங்களில் சிதிலமடைந்த நிலையிலேயே உள்ளது.  இது சம்பந்தமாக கீழக்கரை சட்டப்போராளிகள் மூலமாக தகவல் அறியும் சட்டம் மூலமாக ஓப்பந்தத்தின் நகல்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்களும் அனுப்ப பட்டது.

வடக்குத்தெரு முகைதீனியா பள்ளி நிர்வாகத்தின் சார்பாக கடந்த டிசம்பர் மாதம் கீழக்கரை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சந்திரசேகர் அவர்களை சந்தித்து மனுவும் கொடுக்கப்பட்டது.  இது சம்பந்தமாக கீழை நியூஸ் இணையத்திளும் செய்தி வெளியிடப்பட்டது.

https://keelainews.in/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/

அதைத் தொடர்ந்து சாலை சம்பந்தமான பிரச்சினைகளை சுட்டிகாட்டி கீழை நியூஸ் இணையதளத்தில் பிரத்யேக செய்தியும் வெளியிடப்பட்டது.

https://keelainews.in/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/

ஆனால் இத்தனை முயற்சிகளுக்கும் எந்த ஒரு பலனும் ஏற்படாததால் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி நிர்வாகம் சார்பாக அப்பள்ளியின் பொருளாளர் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அவர் கூறுகையில் கீழக்கரை நகராட்சிக்கு பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத்தால் மாவட்ட ஆட்சி தலைவருக்கு  பள்ளிக்கு வரும் சிறார்களின் சிரமங்களை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் என்று கூறினார்.

இந்த கோரிக்கை மனு மீதாவது அரசாங்கம் கருணை காட்டி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் சாலை அமைக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!