18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் எஸ் டி பி ஐ கட்சியின் பொதுக்குழு கூட்டம் !

கீழக்கரையில் எஸ் டி பி ஐ கட்சியின் பொதுக்குழு கூட்டம் !

எழுதியவர்: Baker BAker January 30, 2024, 6:59 am

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நகர் தலைவர் செய்யது அபுதஹிர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அப்துல் ஜெமில், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அக்பர் ,விம் மாவட்ட துணை தலைவி முபீனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கிர் அருஸி சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி நடக்கும் மீனவர் களுக்கான ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் , உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்றும் , ஒன் பூத் ஒன் பிரான்ச் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விம் கீழக்கரை நகர் தலைவி ஜாபிரா மற்றும் துணை தலைவி அஜிதா எஸ்டிபிஐ கட்சியின் 18வது வார்டு கவுன்சிலர் ஜக்கினா பேகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக நகர் பொருளாளர் சாதிக் அலி நன்றியுரை ஆற்றினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!