17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு கீழை நியூஸ் & சத்திய பாதை குழுமம் பாராட்டு..

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு கீழை நியூஸ் & சத்திய பாதை குழுமம் பாராட்டு..

எழுதியவர்: Askar January 29, 2024, 5:58 pm

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு கீழை நியூஸ் & சத்திய பாதை குழுமம் பாராட்டு..

பழமை வாய்ந்த கீழக்கரை பள்ளிவாசல் குறித்து அவதூறு கருத்துக்களையும் தொடர்ந்து கலவரத்தை தூண்டும் விதமாகவும்,
இந்து முன்னணி முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக பொது அமைதியை சீர்குலைத்து தமிழ் நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் மத வெறுப்பை விதைக்கும் கருத்துக்களை பதிவு செய்து வந்த நிலையில் நமது குழுமத்தின் சார்பாக அதை சுட்டிக் காட்டி இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.

மேலும் கீழக்கரையில் பழமையான பள்ளிவாசல் கோவில் இடித்து கட்டப்பட்டது என்று இந்து முஸ்லீம்களிடையே மோதலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் இதுபோன்ற வெறுப்பு பேச்சுக்கள் தமிழ் நாட்டில் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டு பரப்பி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

உடனடியாக துரிதமாக செயல்பட்ட ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” குழுமத்தின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு,

அந்த நபரை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான கடும் தண்டனையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!