17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் உங்கள் ஊரில் உங்கள் SP புதிய திட்டம் அறிமுகம் !

இராமநாதபுரம் மாவட்டத்தில் உங்கள் ஊரில் உங்கள் SP புதிய திட்டம் அறிமுகம் !

எழுதியவர்: Baker BAker January 29, 2024, 2:14 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக G.சந்தீஷ் பொறுப்பேற்று “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக முதுகுளத்தூர் உட்கோட்டம் காக்கூர், புளியங்குடி , செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பொதுமக்கள் முக்கிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடி அக்கிராம பகுதிகளில் இருந்து வரும் சூழ்நிலைகளை பற்றி அறிந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதன் நோக்கம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள், போதை பொருட்கள்/குட்கா விற்பனை குறித்த தகவல்கள் தெரிவித்தல் மட்டுமின்றி வருவாய்துறையினர் மூலம் நிவாரணம் பெறக்கூடிய பிரச்சனைகள், இளைஞர்களுக்கான எதிர்கால படிப்புகள் மற்றும் பணி வாய்ப்புகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல், விளையாட்டு போட்டிகள் மூலம் இளைஞர்களை ஊக்குவித்தல், கிராமங்களில் போதிய புத்தகங்களுடன் கூடிய தேவையான நூலக வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்றவை திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய கிராமங்களுக்கும் சென்று “உங்கள் ஊரில் உங்கள் SP” திட்டத்தின் மூலம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!