17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மண்டபம் பேரூரில் இஸ்லாம் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..

மண்டபம் பேரூரில் இஸ்லாம் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..

எழுதியவர்: Askar January 28, 2024, 7:34 pm

மண்டபம் பேரூரில் இஸ்லாம் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மண்டபம் கிளை சார்பில் இஸ்லாம் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. கிளை செயலாளர் முஹமது அஜ்மல் கான் தலைமை வகித்தார். பொருளாளர் பைசூல் கான் முன்னிலை வகித்தார். இஸ்லாம் போதிக்கும் இறை சிந்தனை, நபிகள் போதனை, மனிதநேயம் குறித்து மாநில பேச்சாளர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஷி, மாவட்ட தலைவர் ஷாபிர், மாவட்ட செயலாளர் தினாஜ் கான் பேசினர். துணைத் தலைவர் சீனி ரஹ்மான் கான் நன்றி கூறினார். கிளை தலைவர் அஹமது அலி, துணைச் செயலாளர் ஹாஜா முஹைதீன், மாணவரணி செயலாளர் முஹமது முஷரப், மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத், மாவட்ட துணை செயலாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!