17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி தொகுதி ராஜகோபாலப்பேரி ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி; பழனிநாடார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

தென்காசி தொகுதி ராஜகோபாலப்பேரி ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி; பழனிநாடார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

எழுதியவர்: Abubakker Sithik January 28, 2024, 2:46 pm

தென்காசி மாவட்டம் ராஜகோபாலப்பேரி ஊராட்சியில், புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பழனிநாடார் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தென்காசி தொகுதிக்குட்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ராஜகோபாலப்பேரி ஊராட்சியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் நான்சி ஹேமா, பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணஜெயந்தி, பஞ்சாயத்து துணை தலைவர் ராஜ், வீ.கே.புதூர் ஜேசுராஜன், வக்கீல் சுப்பையா, ரஞ்சித்குமார், வார்டு உறுப்பினர் சந்தனமாரி, லட்சுமி, அரசு ஒப்பந்ததாரர் அருள் தாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!