18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ திட்டம் அறிமுகம்; தமிழக டிஜிபி தொடங்கி வைத்தார்..

மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ திட்டம் அறிமுகம்; தமிழக டிஜிபி தொடங்கி வைத்தார்..

எழுதியவர்: Abubakker Sithik January 28, 2024, 12:47 pm

சென்னை மாநகர காவல் துறையில் மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் ‘பந்தம்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குற்றங்களை தடுக்க 3 புதிய செயலிகளை தமிழக டிஜிபி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் சங்கர் ஜிவால், ஜன.24 ஆம் தேதி வேப்பேரி கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ திட்டம் அறிமுகம் செய்தார்.

சென்னை பெருநகர காவலில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ள “பருந்து”, ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு (IVMS), சென்னை காவல் துறையில் இணையதள மூலம் புகார்களை உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் “நிவாரணம்” ஆகிய 3 செயலிகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!