17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை கும்பிடுமதுரையில் மார்க்க பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்கு..

கீழக்கரை கும்பிடுமதுரையில் மார்க்க பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்கு..

எழுதியவர்: ஆசிரியர் February 23, 2018, 8:18 pm

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று கீழக்கரை அருகே உள்ள கும்பிடுமதுரையில் மார்க்க விளக்கம் நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அவ்வூரில் உள்ள ஓரு பிரிவினர் தவ்ஹீத் ஜமாத் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் கை கலகலப்பாக மீறி தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தாக்கப்பட்டு காயம் அடைந்ததாக அறியப்படுகிறது. இதில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி தினாஜ் கான் மற்றும் சிலருக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி கீழக்கரை காவல் நிலையத்தில் தவ்ஹீத் ஜமாத்தினர் கூடியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!