17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் பேட்டை அரசு பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா..

சோழவந்தான் பேட்டை அரசு பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா..

எழுதியவர்: Askar January 27, 2024, 3:23 pm

சோழவந்தான் பேட்டை அரசு பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா..

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பேட்டை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார் முன்னதாக நிகழ்ச்சிக்கு 1லதுவார்டு கவுன்சிலரும் பணி நியமன குழு உறுப்பினருமான ஈஸ்வரி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார் பேரூர் திமுக துணைச் செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குடியரசு தின விழா பற்றியும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு பற்றியும் மாணவ மாணவியரிடம் பேசினார்கள் இதில் 2வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வி சதீஷ் 14வது வார்டு கவுன்சிலர் நிஷா கௌதம ராஜா.மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி இலக்கிய போட்டி மற்றும் மாறுவேட போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது நிகழ்ச்சி முடிவில் பள்ளி ஆசிரியை நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!