18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதிகளில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது..

சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதிகளில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது..

எழுதியவர்: Askar January 27, 2024, 3:16 pm

சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதிகளில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது..

75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்கருப்பட்டி ஊராட்சியில் தலைவர் அம்பிகா தலைமையில் துணைத்தலைவர் சித்ராதேவி முன்னிலையில் ஊராட்சி செயலாளர் முனியாண்டி, அறிக்கை வாசிக்க கிராம சபை கூட்டம் நடைபெற்றது முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலாளர் மனோ பாரதி அறிக்கை வாசிக்க கிராம சபை கூட்டம் நடைபெற்றது தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளாஐயப்பன் தலைமையில் துணைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் முனியராஜ், காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன் தலைமையில் ஊராட்சி செயலாளர் ஓயணன், திருவாளவாயநல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர்ஜாதிக் தலைமையில் துணைத்தலைவர் மாலிக் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் வேலன், சி புதூர் ஊராட்சியில் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் துணைத் தலைவர் விசாலாட்சி முன்னிலையில் ஊராட்சி செயலாளர் காசிலிங்கம், மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் தலைமையில் துணைத்தலைவர் சித்தாண்டி முன்னிலையில் ஊராட்சி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் அந்தந்த ஊராட்சியில் அறிக்கை வாசித்தனர் இதில் அரசு துறையைச் சேர்ந்த பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில்விக்கிரமங்கலம் ஊராட்சியில் தலைவர் கலியுகநாதன் தலைமையில் துணைத்தலைவர் செல்விசெல்வம் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் பால்பாண்டி,முதலைக்குளம் ஊராட்சியில் பூங்கொடிபாண்டி தலைமையில் துணைத் தலைவர் ரேவதி பெரிய கருப்பன் முன்னிலையில் செயலாளர் பாண்டி, பானா மூப்பன்பட்டி ஊராட்சியில் தலைவர் மகாராஜன் தலைமையில் துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் பாண்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் அந்தந்த ஊராட்சியில் அறிக்கை வாசிக்கப்பட்டது.
இதில் வார்டு உறுப்பினர்கள், வருவாய்த்துறை,100நாள் பணியாளர்,சமூகநலத்துறை, அங்கன்வாடி பணியாளர்,கல்வித்துறை, ரேஷன்கடை பணியாளர் உள்பட அரசுத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள். தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!