18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி தலைமை மருத்துவமனையில் இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழா..

தென்காசி தலைமை மருத்துவமனையில் இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழா..

எழுதியவர்: Abubakker Sithik January 26, 2024, 2:53 pm

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். ஜெஸ்லின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரும் நாட்டுப்பற்றுடனும், சாதி மத இன வேறுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் தென்காசி மருத்துவமனை உறைவிட மருத்துவர் செல்வபாலா, குழந்தைகள் நல மூத்த மருத்துவர் எஸ்.எஸ். ராஜேஷ், காது மூக்கு தொண்டை நிபுணர் சரஸ்வதி, கோபிகா, நிவோதினி ,செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, முத்துலட்சுமி, மூத்த நுண்கதிர் நுட்புணர் முருகன், செவிலியர்கள் பணியாளர்கள் என அனைவரும் 75 வது இந்திய குடியரசு தின நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!