18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மீதான தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மீதான தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: Abubakker Sithik January 26, 2024, 9:24 am

தென்காசியில் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், தென்காசியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஊடகத்தினர் பங்கேற்று பத்திரிகையாளர்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரியும், தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர் முன்னதாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பத்திரிகையாளர்கள் வலியுறுத்தினர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!