18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் !

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் !

எழுதியவர்: Baker BAker January 25, 2024, 8:07 pm

இராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரில் சுதந்திர போராட்ட தலைவரும் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய வருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 பிறந்தநாள் விழா அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நடைபெற்றது. அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் பி.கீரந்தை வீரப்பெருமாள் தலைமை வகித்தார், மாவட்ட முதன்மை செயலாளர் தீபக் முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளர்களாக முக்குலத்தோர் புலிப்படை மாநில செயலாளர் கமுதி முத்துராமலிங்கம்,மதுரை இளைய நேதாஜி சுவாமிநாதன் சிவகங்கை மாவட்ட பொதுச் செயலாளர் யோகநாதன், டாக்டர் மதிவாணன் அவர்கள்,முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட அமைப்பு செயலாளர் பொன்முத்துராமலிங்கம், நேதாஜி பவுன்டேசன் மாயக்கிருஷ்ணன், நேதாஜி சமூக நல அறக்கட்டளை ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டு தேச நலனில் நேதாஜியின் பங்களிப்பு, இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய காரணம், தேசப்பக்தி போன்ற பல்வேறு தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாணவரணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் தினேஷ், மாவட்ட பொருளாளர் பாரதி, தொழிற்சங்க செயலாளர் வாசுதேவன், முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், கிழக்கு மாவட்ட செயலாளர் பசும்பொன் பாலாஜி ஆகியோர் எற்பாடு செய்தார்கள், தேவர் மீடியா மகேஸ்வரன்,நேதாஜி சுபாஷ் சேனை, வெள்ளாளர் முன்னேற்ற கழகம், ஆகிய பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!