17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்..

குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்..

எழுதியவர்: Abubakker Sithik January 25, 2024, 11:31 am

தென்காசி ரயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள், பயணிகள் அறை, பார்சல் ஆபீஸ், மற்றும் தண்டவாள பாதைகளில் வெடிகுண்டு சோதனை மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசியில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி இருப்புப்பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் டி. செந்தில் குமார் உத்தரவின் பேரில், மதுரை உட்கோட்ட ரயில்வே பொறுப்பு திருநெல்வேலி துணைக் கண்காணிப்பாளர் கே. பொன்னுச்சாமி மற்றும் திருநெல்வேலி வட்ட ஆய்வாளர் டி. செல்வி  ஆலோசனையின் பேரில், தென்காசி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர்கள் மாரிமுத்து, ரவிக்குமார், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நாடான் கண்ணு மற்றும் காவல் ஆளினர்கள் இணைந்து தென்காசி இரயில் நிலையத்தில் பயணிகள் உடைமைகள், பயணிகள் அறை, பார்சல் ஆபீஸ், மற்றும் தண்டவாள பாதைகளில் வெடிகுண்டு சோதனை மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தியும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!