18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்; “சத்திய பாதை” ‘கீழை நியூஸ்’ குழுமம் கடும் கண்டனம்..

திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்; “சத்திய பாதை” ‘கீழை நியூஸ்’ குழுமம் கடும் கண்டனம்..

எழுதியவர்: Askar January 25, 2024, 10:47 am

நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்; “சத்திய பாதை” ‘கீழை நியூஸ்’ குழுமம் கடும் கண்டனம்..

இது சம்பந்தமாக ‘சத்திய பாதை’ மற்றும் ‘கீழை நியூஸ்’ குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு தமது வீட்டருகே இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு நமது குழுமத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் இது சம்பந்தமாக நேச பிரபு போலீசாருக்கு ஏற்கனவே தகவல் அளித்தும் மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை செயலும் கண்டிக்கத்தக்கதாகும்.

கொலை வெறித் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை பாரபட்சம் இன்றி உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்திடும் வகையில் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

இந்த சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!