17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய வாக்காளர் தினம்:மேல் பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு..

தேசிய வாக்காளர் தினம்:மேல் பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு..

எழுதியவர்: Askar January 24, 2024, 4:33 pm

தேசிய வாக்காளர் தினம்: மேல் பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு..

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றனர்.

ஆண்டுதோறும் ஜன 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுக்க பின்பற்றப்படுகிறது. இதையொட்டி, மேல்பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்கள் மாணவியர்கள், வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமையில் நடந்தது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாம், நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம்.தேர்தலில் அச்சமின்றி, ஜாதி,மதம், மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட் படாமலும், எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம், என பள்ளி மாணவர்கள், பாரத சாரணர் இயக்கம், இளம் செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமை படை அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும்  உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, நாராயணன், அரசு, மகேஸ்வரி, ஆறுமுகம், ராஜா, சாந்தி, ராஜாராம், சுதா ,ஆகியோர் பங்கேற்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!