18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்; மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்; மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு..

எழுதியவர்: Abubakker Sithik January 23, 2024, 9:06 pm

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 24-01-2024 புதன் கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு 30-01-2024 செவ்வாய் கிழமை அன்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வைத்து காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!