18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலூர் அருகே சாலை விபத்தில் சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

மேலூர் அருகே சாலை விபத்தில் சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

எழுதியவர்: Askar January 23, 2024, 8:08 pm

மேலூர் அருகே சாலை விபத்தில் சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

மேலூர் அருகே மதுரை – திருச்சி நான்கு வழிச்சாலையில் காடம்பட்டி விளக்கு அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயபிரபா (39) என்பவர் தனது தாய் தந்தையரான கொம்பையா (71), ராமலெட்சுமி (53) மற்றும் தனது சகோதரரின் மகன் ராம் சித்தார்த் (5) வீட்டு பணி பெண் செல்வி (45) ஆகியோருடன் காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் இடது புறம் இருந்த பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அனைவரும் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன் ராம் சித்தார்த் (5) சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதே போல் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமலட்சுமி (53) சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

கொம்பையா (71), ஜெயபிரபா (39), செல்வி (45) ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!