18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் அருகே பாலத்தின் அடியில் ரத்தக்காயத்துடன் ஆண் சடலம் மீட்பு! கொலையா தற்கொலை என போலீசார் விசாரணை..

ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் அருகே பாலத்தின் அடியில் ரத்தக்காயத்துடன் ஆண் சடலம் மீட்பு! கொலையா தற்கொலை என போலீசார் விசாரணை..

எழுதியவர்: Askar January 22, 2024, 8:16 pm

ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் அருகே பாலத்தின் அடியில் ரத்தக்காயத்துடன் ஆண் சடலம் மீட்பு! கொலையா தற்கொலை என போலீசார் விசாரணை..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி சாலை அருகே வேலாயுதபுரம் பாலம் உள்ளது இந்த பாலத்தின் அடியில் ஆண் சடலம் கிடப்பதாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் போலீசார் விரைந்து சென்று ஆண் சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சமுசிகாபுரம் அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 45 வயது மனைவி இருளாயி இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பதும் .

சரவணன் வெல்டிங் வேலை பார்த்து வந்த நிலையில் ரத்தக்காயுடன் சடலமாக மீட்டனர்

இவரை யாரும் கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் தொடர்ந்து அந்த பகுதியில் சிசிடிவி காட்சி மற்றும் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!