17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » ஜித்தா நகரத்தில் கீழக்கரை மக்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி !

ஜித்தா நகரத்தில் கீழக்கரை மக்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி !

எழுதியவர்: Baker BAker January 22, 2024, 10:41 am

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் கீழை சவுதி அமைப்பின் சார்பாக, கீழக்கரை மக்களின் ஒன்றுகூடல், சிறப்பு நிகழ்ச்சி அமைப்பின் கவுரவ தலைவர் முகைதீன் சீனி அலி தலைமையில் உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை கீழை. இர்ஃபான் கிராஅத் ஓத துவங்கி வைத்தார். முகைதீன் சீனி அலி நமது அமைப்பின் நோக்கம் மற்றும் ஊர் மக்கள் ஒற்றுமை பற்றி தலைமையுரை ஆற்றினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சிறந்த பாரம்பரிய மதிய உணவு வகைகளுடன் நிகழ்வு நடைபெற்றது. இதில் சவுதியில் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் சகோதரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.தாஹிர் , ஆசிம் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!