18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » புளியங்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; நகராட்சி சேர்மன் காவல்துறை ஆய்வாளர் இணைந்து துவக்கி வைத்தனர்..

புளியங்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; நகராட்சி சேர்மன் காவல்துறை ஆய்வாளர் இணைந்து துவக்கி வைத்தனர்..

எழுதியவர்: Abubakker Sithik January 20, 2024, 12:53 pm

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன், புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புளியங்குடி மனோ கல்லூரி, மருதம் பயிற்சி மையம் மற்றும் மக்கள் உதவி கூட்டமைப்பு இணைந்து புளியங்குடியில் போக்குவரத்து விதிமுறைகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு மனோ கல்லூரி முதல்வர் முனைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மருதம் பயிற்சி மையம் ஒருங்கிணைப்பாளர் கற்பகராஜா முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் தமிழ்பிரியன் வரவேற்புரை வழங்கினார்.

சாலை பாதுகாப்பு பேரணியை புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன் மற்றும் புளியங்குடி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மக்கள் உதவி கூட்டமைப்பினர் ஒரு சொல்மணி, சாவனா செய்யது, ஹோட்டல் வெள்ளத்துரை ஐயூப், பீரப்பா, மருதம் பயிற்சி மையம் ஆசிரியர்கள், வி.ஆர். முருகேசன், கிருஷ்ண குமார், அருண்குமார், சுந்தர் ராஜ், துரை, மகேஸ் குமார், சிவா, மாரிராஜ், முத்துராஜ், சுரேஷ் குமார், காளிராஜ், மருதம் அறக்கட்டளை தலைவி இந்துமதி, செயலாளர் சுரேஷ்குமார், சந்தோஷ், அறக்கட்டளை உறுப்பினர்கள் சேகர், ராம், கண்ணன், அய்யப்பன், முத்துராஜ், பரத், நவீன், செல்வமணி, மாரிமுத்து, மதன் குமார் ஆகியோருடன் சுமார் 1000 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் மனோ கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!