17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடி யூனியன் பகுதியில் மழை வெள்ளத்தில் நெல், மிளகாய்,மல்லி முற்றிலும் அழிவு !நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் ! !

கடலாடி யூனியன் பகுதியில் மழை வெள்ளத்தில் நெல், மிளகாய்,மல்லி முற்றிலும் அழிவு !நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் ! !

எழுதியவர்: Baker BAker January 19, 2024, 10:51 pm

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய கடலாடி யூனியன் அலுவலகத்தில் கடலாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய பெரும் தலைவர் முத்துலெட்சுமி முனியசாமிபாண்டியன் தலைமையில் ஆனையாளர் ஜெய ஆனந்த் முன்னிலை நடைபெற்றது. கவுன்சில் கூட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து கவுன்சிலர்களின் விவாதம் நடைபெற்றது . குஞ்சரம் (எஸ். தரைக்குடி ) சமீபத்தில் பெய்த மழையாலும் கஞ்சம்பட்டி ஓடையில் ஓடி வந்த வெள்ளத்திலும் எஸ். தரைக்குடி பிர்கா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது 5 ஹெக்டேரில் நெல், மிளகாய்,மல்லி. ஆகியவை அழந்துவிட்டன. நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முனியசாமி பாண்டியன் (அதிமுக) கடலாடி யூனியன் பகுதி முழுவதும் மழை வெள்ளத்தால் விவசாயம் அழிந்துவிட்டன. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முத்துலெட்சுமி (சேர்மன). கடலாடி யூனியன் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். வி.ஜெயச்சந்திரன் (கருங்குளம்) மீனங்குடி அம்மன் கோவில்தெருவில் பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும் எனவும், சாத்தங்குடி வெள்ளாங்குளம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது . விவாதத்தின் முடிவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!