17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அரசு பேருந்து தடுப்புச் சுவரில் மோதி நான்கு பயணிகளுக்கு காயம்: ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு..

மதுரையில் அரசு பேருந்து தடுப்புச் சுவரில் மோதி நான்கு பயணிகளுக்கு காயம்: ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு..

எழுதியவர்: Askar January 19, 2024, 10:13 pm

மதுரையில் அரசு பேருந்து தடுப்புச் சுவரில் மோதி நான்கு பயணிகளுக்கு காயம்: இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிருந்து எல்லிஸ் நகர் பார்க்கிங் பஸ் ஸ்டாப்பிக்கு அரசு பேருந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த 40 க்கும் மேற்ப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த பயணிகளை ஏற்றி வரும் பொழுது எல்லிஸ் நகர் பாலத்திலிருந்து இறங்கும் போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதினார். இதனால் பயணிகள் நான்கு பேருக்கு காயம் ஏற்ப்பட்டது மேலும் அங்கிருத பொதுமக்கள் போக்குவரத்து காவல்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்த காரிமோடு போக்கு வரத்து காவல்து சார்பு ஆய்வார் தார்ச்சூஸ் சம்பவ இடத்திற்கு வந்து தடுப்பு சுவரில் மோதிய பேருந்தில் காயம் ஏற்ப்பட்ட பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்பு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விபத்து ஏற்ப்பட்ட அரசு பேருந்தை மீட்டு வாகனத்தின் மூலம் மீட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இரவு நேரங்களில் அடிக்கடி தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்படுகிறது என்றும் தடுப்புச் சுவரில் ஒளிரும் விளக்கு இல்லாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!