17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைரோடு அருகே விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய ரோந்து வாகன போலீசார்..

கொடைரோடு அருகே விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய ரோந்து வாகன போலீசார்..

எழுதியவர்: Askar January 19, 2024, 9:36 pm

கொடைரோடு அருகே காயம் பட்டவர்களை காப்பாற்றிய ரோந்து வாகன போலீசார்..

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விபத்தில் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், ஹைவே ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்ற காவலர்களை பொது மக்கள் பாராட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மதுரை செல்லும் சாலையில் பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் எதிர்பாராத விதமாக விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்கள் அடிபட்டு படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்தனர். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னால் அவ்வழியாக சென்ற அம்மைநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து பணி காவலர்கள் விஜய் மற்றும் கங்காதரன் உடனடியாக அடிபட்டவர்களை நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்று நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் மனிதாபிமானம் கொண்டு படு காயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த இரண்டு காவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!