18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவலர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் நேர்மை ஆரோக்கியம் மகிழ்ச்சியை வலியுறுத்திய தென்காசி மாவட்ட எஸ்.பி..

காவலர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் நேர்மை ஆரோக்கியம் மகிழ்ச்சியை வலியுறுத்திய தென்காசி மாவட்ட எஸ்.பி..

எழுதியவர்: Abubakker Sithik January 19, 2024, 5:52 pm

தென்காசி மாவட்டத்தில் நடந்த காவலர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் நேர்மை, ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவற்றை மாவட்ட எஸ்.பி. வலியுறுத்தினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் இயங்கி வரும் காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் கடந்த மாதம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் முதல் மாதம் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தின் துவக்கத்தில் (Be Honest) நேர்மையாக இருக்க வேண்டும், (BeHealthy ) ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் (Be Happy) சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற வாசகம் எழுதிய கேக்கை சக காவல் அதிகாரிகளுடன் இணைந்து வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் மாவட்ட எஸ்.பி. இந்நிகழ்வு, கூட்டத்தில் கலந்து கொண்ட சக காவல் அதிகாரிகளுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமைந்தது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!