18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேலத்தில் நடக்க இருக்கும் திமுக இளைஞரணி மாநாடு.. தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

சேலத்தில் நடக்க இருக்கும் திமுக இளைஞரணி மாநாடு.. தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

எழுதியவர்: Askar January 18, 2024, 9:56 am

இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.இந்த மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாடு சுடர் தொடர் ஓட்டத்தை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!