17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக ஆளுநர் வருகை !

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக ஆளுநர் வருகை !

எழுதியவர்: Baker BAker January 16, 2024, 3:22 pm

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த தமிழக ஆளுநர் R.N ரவி திருப்புல்லாணியில் அமைந்துள்ள ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் முதற்கட்டமாக சுவாமி தரிசனம் செய்து பூஜையில் கலந்து கொண்டார் தொடர்ந்து மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோமாதாவை பூஜை செய்தார். அதன் பின் அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டார் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது .அதனை ஏற்றுக் கொண்ட அவர் ராமநாத சுவாமி திருக்கோவில் சன்னிதானம் முன்பு அமைந்துள்ள விநாயகரை வழிபட்ட பின்பு முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமியை தனது மனைவியுடன் இணைந்து வழிபட்டார் அதன் பின் கோவில் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது தீபாரதனையை முடித்துக் கொண்டு பருவதவர்தினி அம்பாளை சுவாமி தரிசனம் மேற்கொண்ட பின்பு திருக்கோவில் வாசலில் தமிழ்நாடு ஆளுநர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்தார் அதன் பின் தனது மனைவியுடன் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்க சென்றார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!