17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள்; மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார்..

தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள்; மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார்..

எழுதியவர்: Abubakker Sithik January 15, 2024, 2:48 pm

தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட எஸ்.பி. போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்ட பொங்கல் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!