17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையம் நகர் பகுதியில் இன்ஜினியர் மற்றும் உதவியாளர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு வடக்கு காவல் நிலைய போலிசார் விசாரணை..

ராஜபாளையம் நகர் பகுதியில் இன்ஜினியர் மற்றும் உதவியாளர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு வடக்கு காவல் நிலைய போலிசார் விசாரணை..

எழுதியவர்: Askar January 13, 2024, 2:27 pm

ராஜபாளையம் நகர் பகுதியில் இன்ஜினியர் மற்றும் உதவியாளர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு வடக்கு காவல் நிலைய போலிசார் விசாரணை..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் 42 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் தற்போதும் சில இடங்களில் குழாய்கள் பணி மற்றும் அடைப்புகள் உள்ளதா என சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் கோவிந்தராஜ் வயது 30 மற்றும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஜான் ஆகிய இருவரும் இன்று ராஜபாளையம் மலையடி பட்டி இரயில் நிலையம் பின்புரம் உள்ள பகுதியில் பாதாள சக்கடை அடைப்பு உள்ளதா என இறங்கி சரி செய்து கொண்டிருந்த பொழுது விஷவாயு தாக்கி இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

பாதாள சாக்கடை குளியில் இருந்தவர்களை தீய னைப்பு துறையினர் இரண்டு உடல்களை எடுத்து இராஜபாளையம் அரசு மருத்துவமணைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!