18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் அருகே லாரி-கார் மோதல் டாக்டர் உயிரிழப்பு..

ராமநாதபுரம் அருகே லாரி-கார் மோதல் டாக்டர் உயிரிழப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 13, 2024, 12:08 pm

இராமநாதபுரம், ஜன.13 – ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உமா கணேஷ், டாக்டரான இவர், ராமநாதபுரம், வண்ணாங்குண்டு பகுதியில் ஜெகன்ஸ் நுரையீரல் கிளினிக் நடத்தி வந்தார். நேற்று காலை மதுரை சென்ற இவர் தனது வேலைகளை முடித்து விட்டு சொந்த காரில் நேற்றிரவு ஊர் திரும்பினார். ராமநாதபுரம் அருகே 

அச்சுந்தன்வயல் சேதுபதி அரசு கலை கல்லூரி பகுதியில் வந்தபோது சாலை நின்ற லாரி மீது கார் எதிர்பாராவிதமாக மோதியது. இதில் உமா கணேஷ் உயிரிழந்தார். மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் இறந்த டாக்டர் உமா கணேஷ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், ரமேஷ் தியேட்டர் உரிமையாளருமான  ரமேஷ் பாபுவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!