டெல்லியில் உள்ள ஷஹ்தரா விஸ்வாஸ் நகர் பகுதியில் மோமோவுக்கு கூடுதலாக சட்னி கேட்ட சந்தீப் என்பவரை கடையின் உரிமையாளர் விகாஸ் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சந்தீப் கூடுதலாக சட்னி கேட்டபோது விகாஸ் மறுத்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாய் சண்டை தீவிரமடைந்த நிலையில், அங்கு இருவருக்குள்ளும் ரகளை ஏற்பட்டுள்ளது. இதில், கடையின் உரிமையாளர் சந்தீபை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார்.இந்த மோதலில், சந்தீப்பின் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, முகத்தில் காயங்களுடன் சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தீப் மீது தாக்குதல் நடத்திய விகாஸ் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவானார். இந்நிலையில், விகாஸை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ஒரு நியாயம் வேனாமடா! சட்னி கேட்டவரை சட்னி ஆக்கிய கடை உரிமையாளர்..
எழுதியவர்: Askar January 12, 2024, 10:00 pm




You must be logged in to post a comment.